இலங்கையில் தஃவா செய்யப் புறப்பட்ட அமைப்புகள் மிகப்பெரும்பாலும் தங்களின் பெயரையும் அமைப்பின் மதிப்பையும் மட்டுமே மானமெனக்கருதி அதற்காக உயிரையும் விட்டுக்கொள்கிறார்கள். நாங்கள் சிறு பராயத்தில் இஸ்லாம் பாட மெனப்படித்தது என்ன? O/L வரைக்கும் முன்னொரு காலத்தில் நடந்த யுத்தங்கள், எத்தனை குதிரைகள் இருந்தன,மரணித்தவர்கள் எத்தனை பேர்?. இத்தியாதி புள்ளி விபரங்கள்,பின்னர் நிறைய நாடுகள் பிடிக்கப்பட்ட வரலாறுகள்,இறுதியில் ஆறுதலுக்காக அதெல்லம் அவர்கள் விட்ட அரசியல் தவறுகள் என்று முடியும்..கடைசியில் முஸ்லிமல்லாத மக்கள் யுத்த எதிரிகள் போலவும், வெண்டுமென்ற இறை நிராகரிப்பாளர்கள்..போர் புரியத்தக்கவர்கள் போலவும் ஒரு மனப்பான்மை.. அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மட்டும் றப்பு என்பதால் ஒரு பிரச்சினைக்குரிய சமூகமாக மற்றவர்கள் நமது மனதிற்குள் வந்துவிடுகிறார்கள்.அரபு மதரசாக்களில் படிப்பவர்களைத்தவிர்த்து, ஓரளவில் தங்களை இஸ்லாம் கற்பதோடு இணைத்துக்கொண்டவர்களிடம் உள்ள இறை நிராகரிப்பு,அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் பற்றிய புரிதல் அபாயகரமானதாகிறது. இவர்களிடத்தில் இலங்கையில் உள்ள மாற்றுக் கருத்து சகோதரனும், மக்கா காலப்பிரிவில் முஃமீன்களோடு ஆயுதம் கொண்டு பொருதியவனும் சமனாகவே இருக்கிறார்கள்.. கருதுப்பகிர்வு, உரையாடல் போன்ற அமைதி வழிமுறை அன்றி சண்டையிடுதல் முறயிலேயே அவனோடு உறவு இருக்கிறது.. சில வேளைகளில் வன்முறையாக வெடித்து முழு சமூகத்தின் மானமும் போகிறது..ஷிர்க் மற்றும் பித்அத விடயத்தில் இலங்கை முஸ்லிம்கள் & முஸ்லிமல்லாதவர்களோடு எப்படி நடப்பது என்பது மிக முக்கியமான விடயம். இது சமாதான்மும் அமைதியுமான இஸ்லாத்தின் சர்வதேச் தூதை எடுத்துரைப்பதில் பெரும் பாதிப்பு செலுத்துகிற விடயமாகும்.நாங்கள் இன்னும் நமது நாடு, சிறுபான்மைச்சூழல் குறித்து கவனமெடுக்காமல் தஃவா பற்றித் திட்டமிடுவது இனு வரும் புதிய தலைமுறயின்ரை கடுமையகப்பாதிக்கும்.ஒரு முஃமின் விபச்சாரம் செய்யும் போதும் திருட்டுக்குற்றம் செய்யும் போதும் அவ்னை முஃமினாக கணக்கிலெடுக்கமுடியாது என்பது இஸ்லமிய அடிப்படை.இவை இரண்டும் மிகப்பெரிய வன்முறையும் காடைத்தனமுமாகும்.இந்த நிலையில் சகோதர முஸ்லிமை கருத்தால் விமர்சிப்பதயும் தாண்டி வைவதும் அத்துமீறி தாக்குவதும் பெரிய வன்முறைதான். அவன் உயிரை அழிக்கும் அளவிலான் மீறல் வன்முறையின் உச்சக்கட்டம்.யாராக இருந்தாலும் அது மிகப்பெரிய பாவமும் மனித் இனத்துக்கெதிரான துரோகமும் ஆகிறது.இலங்கையின் இஸ்லமிய பிரச்சார அமைப்புகள் தயவு செய்து இளைஞர்களை படிக்க விடுவேர்களா?? பல கடவுள் நம்பிக்கையும், மதமுறைமைகளும் உள்ள இலங்கையில் இஸ்லாமிய பிரச்சாரம் குரித்தும் நாட்டின் அபிவிருத்தியில் அவர்களை பெரிய அளவில் பங்கெடுக்கவும் அவர்கள் நிறய படிக்கவேண்டி இருக்கிறது. அவர்களை சுயமாக சிந்திக்க விடுங்கள்..ஏற்கெனவே பதிவு செய்த உங்கள் புனித விளக்கங்களையும்,உபதேசங்களையும் திணிக்க வேண்டாம். அவர்களுக்கும் மூளை இருக்கிறது..இது எல்லா வகையான செய்குமார்கள், பிரசன்னிகள், அமைப்புகள் எல்லோரிடமும் சொல்ல விரும்புகிற செய்தி.
அல்லாஹ் எங்களை மன்னிப்பானாக.
ஆமீன்