Thursday, July 28, 2016

பெண்களைத்தண்டித்தலும் - பெண்ணின் மனித உயர்மையை ( Human Dignity ) மீறலும்

 - இஸ்லாமிய குடும்பம் &  சட்டவியலின் உயர் நோக்குகளின் பின்னணியில் ஒரு மறுவாசிப்பு - 



பின்னனி


ஒரு ஆரோக்கியமான மின் - குழும உரையாடலின் போது சகோதரர்நிஹாஜ்; குடும்பவன்முறை, முஸ்லிம்சமுகத்துஆணாதிக்கமனோவியல், விசாரனை & தீர்ப்புமண்றங்களின்ஆண்சார்ஒற்றைபார்வைமுறைமைபற்றியும் , அதன்பின்விளைவாய்வளர்ச்சியுற்றஆண், பெணின்மனோபாவங்கள்குறித்தும்அனுபவஉதாரணங்களோடுஇரண்டுகுறிப்புக்களைப்பதிந்திருந்தார். இரண்டுசம்பவங்களைஅதிலிருந்துவேறுபிரித்துஎடுத்துக்கொள்ளலாம்.


சம்பவம்ஒன்று

நண்பர் : 

"மச்சான்ஆதத்துடவளஞ்சவிழாஎழுபிலதானபொம்புளையபடைச்ச, நிமிராதுடாசமாளிச்சுபோறதான் "

மாப்பிளசார்: 

(புடார்எண்டுஅந்நிஸாவுட 34 வதுவசனத்தஒதுறார்) , மச்சான்பாத்தியாஅல்லாவேசொல்லிட்டான்அடியிலகுடுத்தாத்தான்சரிவருவாளுகள், காதியும்உறைக்கிறமாதிரிசென்னத்துக்குபொறவுஇப்பபரவாஇல்லமச்சான். 


சம்பவம்இரண்டு

மனைவி :

எதுக்கெடுத்தாலும்அடிக்காரு - குரானிலேயேசெல்லிஇருக்கேஅம்புள்ளனாஅப்புடித்தான்

வாப்பாஉம்மாவஇழுத்துசும்மாசும்மாஏசுராரு - உம்மாவையும்வாப்பாவையும்ஊட்டவிட்டுஅனுப்பிபார்ப்போம்

இரவிலபிந்திவாராருகஞ்சாமணம்மாதிரி- அம்புள்ளனாஅப்புடித்தான், ஊருலஎல்லாரும்அப்படிதான்


சம்பவங்களின் ஆழமான சமூகவியல் பின்புலம்


முதலாவதுசம்பவம், பாரம்பரியஆணின்மனோபாவம்தெரிந்தோதெரியாமலோஒர்அபாயகரமானபுரிதலில்கட்டமைந்துள்ளதுஎன்பதைக்காட்டும்உரையாடல். பெண்மீதுதனக்குள்ளஅதிகாரம்தனியானதுஅதுஇறைவன்மூலமாகநேரடியாகக்கிடைத்தது. விசாரணைகளுக்குஅப்பால்பிரயோகிக்கிறஅளவில்தன் கைவசப்பட்டதுஎன்றுஎண்ணுகிறதுஆணின்மிகசாதாரணமனம்.


இரண்டாவது, அதன்விளைவாய்ஒடுக்கப்பட்டபெண்ணின்சரணாகதிமனம்அழும்குரல். “குரானேஅடிக்கச்சொல்லுதாமே”என்கிறஅவளதுஅங்கலாய்ப்பில்எங்குபோய்சரணடைவது.அவள்அந்தஅர்தத்தைப்பார்த்துகேள்விகேட்கமுடியாது. உடல்சார்வன்முறைகுறித்துஅவளுக்குமேன்முறையீட்டுவாய்ப்புஇல்லாதுபோகிறகணம்.. மீதியாய்அவளதுசாட்சியம்கணவனின்நடத்தையின்வன்முறையோடுதொடர்கிறது.


இரண்டும்வெவ்வேறுசம்பவங்கள்தான். ஆனாலும், மிகஇறுக்கமானவரலாற்று, சமுகவியல்தொடர்புள்ளவை. ஒட்டுமொத்தசமூகத்தின்வியாபகாமிகியுள்ளகுடும்பவன்முறை,அதன்பின்னையவிளைவுளைமிகஇலகுவாய்ப்புரிந்துகொள்ளஎடுத்துக்காட்டாய்அமைபவை.


ஆண்என்றால்மனைவியைஅடிக்கலாம்.. அதற்குஅவனுக்குஉரிமைதரப்பட்டிருக்கிறது… ஆண்அப்படித்தான்இருப்பான் என்கிறநமதுஆழ்மனதின்புரிதல்இது.இந்தபொய்மையின்கற்பிதத்தைஉடைத்தெறியஒருஇனம்புரியாதஅச்சம்எம்மைத்தடுக்கிறது. 


எதன் அடிப்படையில் இந்த புரிதல் கட்டமைந்துள்ளது? 


அல்குர் ஆன் வசனம் - மறுவாசிப்பு


குடும்ப வாழ்கையின் சட்டங்கள், பெண்களை நிர்வகித்தல் தொடர்பில் எழுதப்பட்ட பல நூறு சட்ட நூல்களை ஆராய இங்கு முயற்சி செய்யப்படவில்லை. குறித்த விடயத்தோடு நேரடியாகத் தொடர்புற்ற வசனத்தினை மறுவாசிப்பு செய்கிற ஒரு முயற்சி மட்டுமே இது, 


அல்குரானில் பெண்கள் என்கிற பெயர் கொண்ட அத்தியாயத்தின் 34ம் 35ம் வசனங்களுக்கு தரப்பட்ட மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கத்தின் அடைப்படையில் தோற்றம் பெற்ற எண்ணக்கருக்கள்தான் இத்தகைய மனோபாவத்தினை பல பரம்பரைகள் தாண்டியும் ஆட்சி செய்கின்றன.

34ம் வசனம் :



الرِّجَالُقَوَّامُونَعَلَىالنِّسَاءِ

ஆண்கள் பெண்களின் பாதுகவலர்கள். அவர்களுக்கான வாழ்வாதாரங்களின் ஏற்பாடுகளை அமைத்து நெறிப்படுத்திக்கொள்வதற்கு ஆதாரமாயும் பாதுகாப்பாகவும் இருக்கப் பொறுப்பானவர்கள்.  


(இரண்டு விடயங்கள்  அந்த பொறுப்புக்குக் காரணமாய் அமையும்)



بِمَافَضَّلَاللَّـهُبَعْضَهُمْعَلَىٰبَعْضٍ

1- அல்லாஹ் அவர்களில் சிலருக்கு  சிறப்பாக மேம்பாடு அளித்து இருக்கிறான்.  பொறுப்புக்களை எடுத்துச்செய்யும் விஷேட இயல்பும் திறமையும் அவர்களுக்கு வழங்கபட்டிருக்கிறது.



وَبِمَاأَنفَقُوامِنْأَمْوَالِهِمْ

2-  அவர்கள் தமது சொத்து, செல்வங்களிலிருந்து செலவுசெய்கிற பணியையும் செய்கிறார்கள்.  முதல் கட்டத்து குடும்பத்துக்கான பொருளாதர ஈட்டல், செலவாக்கப்பொறுப்பும் அடிப்படையில் ஆண்களுக்குரியது.


குடும்பத்தின் நிர்வாகம், பாதுகாப்புப் பொறுப்பு , அதன் சொத்தீட்டல் நிதி நிர்வாகம் என்பன அடிப்படையில் ஆண்களுக்கு வழங்கப்படுகின்றது (விதிவிலக்கான சூழ்நிலைகளும் உண்டு என்பது வேறுவிடயம்). அதனடடிப்படையில் குடும்ப வாழ்க்கை தொடர்கிறது,  வாழ்கையின் பல்வேறு பரினாமங்களையும் கடந்து செல்லுகிற பயணத்தில் ஆண் தன் வாழ்க்கைப் பங்காளியின் குணவியல்புகள் ( Characteristics) தொடர்பில் பல அனுபவங்களைப் பெறுகிறான்.  அதன் வித்தியாசமான வகையீட்டினை அடுத்த வசனம் சொல்கிறது. பெண்கள் இயல்பில் மிக உயர் வகை பண்புள்ளவர்கள் என குரான் விபரிப்பதைக்காணலாம். பெண்கள் என்றோ , மனைவிமார் என்றோ குறிப்பிடாமல் நேரடையாக அவ்வுயர் குணப்பண்புகளால் பெண்களை அடையாளப்படுத்தும் வசனங்கள் இவை.



فَالصَّالِحَاتُقَانِتَاتٌحَافِظَاتٌلِّلْغَيْبِبِمَاحَفِظَاللَّـهُ

முதலாவது அவள் ஸாலிஹா - صالحة  என்கிற வகையறா. வாழ்கை ஓட்டத்திற்கு பொருத்தமான சிறப்பியல்புகளைக்கொண்டவள். செயற்பாட்டளவில் வாழ்வோட்டத்தின் மாறுதல்களுக்கேற்ப  இயல்பானதும் நடைமுறைச்சத்தியம் கொண்டதுமான போக்குள்ளவள் என்றவாறு இங்கு ஆண் தன் மனைவியப் புரிந்து கொள்கிறான். 


இரண்டாவது அவள் காணிதா - قانتة என்கிற வகை. இது அவளது ஆன்மீக வாழவியல் ( Spiritualistic Character ) தொடர்பிலான குணப்பண்பு. சதாவும் இறை நினைவுடன் தன் செயல்களை நெறிப்படுத்திக்கொள்பவள் என்பது பொருள். இறைவணக்க வழிபாடுகளில் ஆழந்த ஈடுபாடுள்ளமையும் இதிலடங்கும். இது தனிப்பட்ட வாழ்வின் பாற்பட்டது என்றாலும் கணவன், சமுகம் என்கிற தொடர்பாடலில் எப்போதும்  தாக்கம் செலுத்துகிற Factor ஆகும்.


மூன்றாவது அவள் - حافظة للغيب بما حفظ الله - இது வித்தியாசமான ஒரு நடத்தைசார் குணவியல்பு வகையாகும்.  ஆழமான அர்த்தம் கொண்டது. தனிப்பட்ட வாழ்வில்  அல்லாஹ்வின் வழிகாட்டல்களை கடமையுணர்வோடு தவறாமல்  மிக அவதானமாக செயற்படுத்துவதுடன், பொது வாழ்வில் கணவனோடுள்ள உறவு, அவனது சொத்துக்களை கையாள்வது போல் அவனது இன்மையிலும் (Absence) அதே கவனத்தோடு செயற்படுதல் முகியமானது.  வீடு, குழந்தைகள், கனவன் உடமைகளை அவனது இன்மையின் போது மிக கவனமாகப் பாதுகாப்பது. பெண் தன்னுடைய சுயம், அதன் பயன்பாட்டுக்கான எல்லாவகையான முழு பயன்பாட்டு உரிமத்தினத்துக்கான பாதுகப்பு உத்தரவாதம் கனவனுக்கிருப்பதைப் உறுதிப்படுத்தும் மனோவலிமையை இது குறிகும். ( தவிர்க்கமுடியாத தேவைகளின் போது பெண் தனிமையாக வாழ்தல், கனவனின் இன்மையில் அன்றாட வாழ்வை கொண்டு செல்லல் போன்ற சந்தர்ப்பங்களில் பெண்ணின் இந்த முக்கிய குணவியல்பு அவளுக்கு மிகப் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் )


மிக தெளிவான அடைப்படைளில் எழுகிற குடும்ப வாழ்க்கை, பிரச்சினைகளுக்கு உட்படுவது யதார்த்தமானது.  பிரச்சினை அதிகரித்து உறவில் இடைவெளி தோன்றலாம். கனவன் தான் முன்னமே தன் துணைவியில் கண்ட இயல்புகள்  தேய்ந்து மறைந்து வேறு சில வகை பண்புகளை அவதானிக்க ஆரம்பிக்கலாம். அப்போது மனதில் ஒரு அச்சம் பரவத் தொடங்கும். தன் துணையைப் பிரிந்து விடுவேமா ?  ஏன் மாற்றம் ? என்ன செய்வதென்ற தடுமாற்றம். ஆணின் இந்த மனோனிலையை வசனத்தின் அடுத்த பகுதி அழகாய்ச் சொல்கிறது.



وَاللَّاتِيتَخَافُونَنُشُوزَهُنَّ

உறவில் இருந்த சமநிலை குழறுபடி கண்டுவிடுவதாக உணருகிர நிலை. பரஸ்பர பகிர்தலும் விட்டுக்கொடுப்பும் என போகும் வாழ்க்கையில் துணையின் செயற்பாடுகளில் பெரியளவில் ஆணை மீறிச்செல்கிற நிலை தெரிகிற நிலையில் ஏற்படும் தடுமாற்ற நிலைக்கு நீங்கள் வந்தால்.  இந்த கட்டம் முக்கியமானது. 


எப்படி இதனை தீர்த்துக்கொள்வது?


உடனடியாக பிரிவு என்கிற தீர்வை குரான் சொல்லவில்லை.  பிரச்சினையை கட்டம் கட்டமாக அனுகவேண்டிய ஆலோசனை வருகிறது.  


தீர்வு முயற்சி (Resolution Process) இரண்டு தளங்களில் செற்படுத்தப்படவேண்டும். 


முதலாவது தளம் வீடு. அதன் உள்ளேயே எடுக்கப்படவேண்டிய முயற்சிகள் . கணவன் மனைவி என் இரு தரப்பார் மட்டும் சம்பத்தப்படுவது. இது மூண்று கட்டங்களைக்கொண்டது.



فَعِظُوهُنَّ

1 - அவர்களுக்கு தெளிவான புரிதல் ஏற்படும் வரைக்கும், படிப்பினைகள் தரும் விடையங்களை கூறுங்கள்.  இது மிக நிதானமான உரயாடல் தேவைப்படுகின்ற இடம். குர் ஆன் இங்கு பயன்படுத்தியுள்ள சொற்பிரயோகம் நுணுக்கமானது. வெறுமனே புத்தி சொல்லுதல் எண்று மட்டும் குறிப்பிடாமல் படிப்பினைகள் தரக்கூடிய விடயங்களை பேசுங்கள் என கேட்கிறது.  இதற்கு ஆழமான உரையாடல் தேவை. முதலில் நேரமொதுக்க வேண்டும். அருகருகே அமர வேண்டும். அழகிய வார்த்தைகள் வேண்டும். இருவரும் பரஸ்பரம் செவிமெடுக்க வேண்டும்.  ஒப்பீட்டுக்கொள்ள வேறு சில சம்பவங்கள் உதாரணமாய்ச் சொல்லிக்கொள்ள வேண்டி வரும்.  முன்னமே மனைவியிடம் கண்ட அல்லாஹ் மெச்சுகிற நல்ல பண்புகளை மீட்டலாம் ஞாபகமூட்டலாம்.. ஒரே அமர்வில் இது முடிந்து விடாது. சில வேளை மனைவியிடம் இப்படி வெளிப்படையாக பேசிக்கொள்ள முடியுமான வாய்ப்புகள் கிடைக்காமல் போயிருக்கலாம். திருத்திக்கொள்ளவேண்டிதயது கணவனாய் இருக்கலாம். தூய்மையான உரையாடல், மன வெளிப்பாடு, புரிதல் பிரச்சினையத்தீர்க்கலாம். நமது இளைஞர்கள், இந்த கட்டத்தில் உம்மாவை, மாமியை, வேறு சில மூண்றாம் நபரை புத்தி சொல்லவென பயன்படுத்துவது வெற்றியளிப்பதில்லை. மனம் திறந்து பேச முடியாத சூழலையே உருவாக்கும். மனம் விட்டுப் பேசித்தீர்க்கமுடியுமான பிரச்சினைகள் என்றிருந்தால் இந்த கட்டத்தோடு சுமுக நிலை ஏற்பட்டுவிடலாம்.



وَاهْجُرُوهُنَّفِيالْمَضَاجِعِ

2 -  அடுத்த முயற்சி மிக்க உணர்வு பூர்வமானது. மிக நெருங்கிய உறவு சார்விடயம். இருவரும் கூடுகிற நேரங்களில் கனவன் தன்னை புறமொதிக்கிகொள்கிற முயற்சியை வேண்டி நிற்கிறது. கிடத்தட்ட ஒரு விருப்மின்மையினை, தூரப்படுகிற மனோனிலையினை வெளிப்படையாக காட்டுதல் என கொள்ளலாம். துணைவியோடு ஒரு சில நாட்கள பேசாமலிருத்தலையும் இது குறிக்கும் என்றும் சில அபிப்பிராயம் உண்டு. ஆனாலும், மனம் விட்டுப்பேசியும் பயனில்லை என்றாகிவிட்ட போது, அவன் அவள் அருகில் உறங்கும் சந்தர்ப்பங்களை தவிர்க்கிற கட்டம். என் மனம் இன்னும் சேர்ந்து கொள்ளவே துடிக்கிறது. உன்னை உணரவைப்பதற்காய் சேய்மைப்பட்டுக்கிடக்கிறேன் என்ற செய்தியை வித்தியாசமாய்ச் சொல்லும் முயற்சி இது. இதற்கான கால எல்லை சொல்லப்படவில்லை. பிரிவுத்துயரின் நீளலில் தவிக்கையில் எந்த வேளையிலும் அன்பு மீள பற்றிக்கொள்லலாம்.   


3 -  மூன்றாம் கட்டம் : ஆண்கள் துணைவிகளை, வீட்டை விட்டு, பிரிந்து செல்லல். பொளதீக ரீதியான தற்காலிகமாக ஒரு வெளிநடப்பு முயற்சி. 


(இங்கு ضرب என்கிற சொல்லுக்கு நமக்கு முன்னமே பரிச்சயமான —அடித்தல்— என்ற மொழிபெயர்ப்பு சரியானதோ, பொருத்தமானதோ அல்ல என்பதை பின்னர்  தொடர்ந்து விரிவாக விளக்க முனைவோம்.) 


முதல்  2  முயற்சிகளும் மனைவியின் உயர் குணவொழுக்கங்களை மீளப்பெறுவதற்கான அதிகளவில் மனம் சார்ந்த பேராட்டம். இருவரும் ஓரிடத்தில் , அருகாமையில் இருந்தபோது செய்யப்படுவது. இந்த இரண்டு கட்டத்திலும் எங்குமே வன்முறை சார் செயற்பாடுகள் சிறிய பெரிய அளவில் இருக்கவில்லை என்பது தெளிவு. 

முண்றாவதாய் அல்குர் ஆன்  சொல்லும் உபாயம், கனவன் வீட்டை விட்டு வெளியேறிச்செல்வதாகும். தன் இன்மையினை துணைவி பொளதீக ரீதியாக உணர்த்தும் கடின முயற்சி.  மனம் திறந்த பேச்சும் உரையாடலும், மானசீகமாய்க் கூடலைத்தவிர்த்தலும், சில நாட்கள் பேசாமலிருத்தலும், நன்மை பயக்காத போது, கணவனால் செய்ய முடியுமான இன்னொரு நடைமுறசார் முயற்சி. வீட்டை, துணைவியைப் பிர்ந்து செல்லல், சாதரனமாய் பயனங்களுக்காய் பிரதலை விடவும் என்ன நோக்கில் வெளியே செல்கிறேன் என்பதும் தீர்வுக்காகவே போகிறேன்,  நீ மனம் திறந்தால் திரும்பி வருவதற்காய்த்தான் செல்கிறேன் என்கிற செய்தியைச் சொல்லும் கட்டமே இது. கனவன் வீட்டில் இல்லை என்பது இன்னும் கொஞ்சம் வினையமாக துனைவிய சிந்திக்க வைக்கும். குழந்தைகள் இருப்பின் இன்னும் இது தாக்கம் செலுத்தும் தன்மையுள்ளது. சமூக அளவிலும் இது அவளைச் ஒரு முடிவு நோக்கி சிந்துக்க வைக்கும் அழுத்தம் தர வல்லது.



فَإِنْأَطَعْنَكُمْفَلَاتَبْغُواعَلَيْهِنَّسَبِيلًا ۗإِنَّاللَّـهَكَانَعَلِيًّاكَبِيرًا

இந்த கணத்தில் துனைவி மீள இயல்பு நிலைக்கு வருகிற சந்தர்ப்பத்தில், வேறு வழிகள் எதுவும் உமக்குத் தேவையில்லை என்கிறது குரான். அல்லாஹ் அதை நன்றிந்தவன்.


வீட்டுக்குள்ளே மூன்றாம் தரப்பின்றி நடக்கும் இந்த சமரச முஸ்தீபுகள் தோல்வியுறுகிற நிலையில் தீர்வு முயற்சி அடுத்த தளத்தினை நேக்கி நகர்கிறது. ஆன்களைப்பார்த்து பேசிக்கிக்கொண்டிருந்த வசனம் இப்போது, சமுகத்தின் பொறுப்பு சார் தரப்பைப் பார்ர்துப் பேசுகிறது.



وَإِنْخِفْتُمْشِقَاقَبَيْنِهِمَافَابْعَثُواحَكَمًامِّنْأَهْلِهِوَحَكَمًامِّنْأَهْلِهَاإِنيُرِيدَاإِصْلَاحًايُوَفِّقِاللَّـهُبَيْنَهُمَا ۗإِنَّاللَّـهَكَانَعَلِيمًاخَبِيرً

தம்பதியினர் இருவரும் தம்மால் தீர்த்துக்கொள்ள முடியாமல் இன்னும் முரண், சர்ச்சை, தூரப்பட்ட பிரிவு நிலையிலேயே இருப்பதாக நீங்கள் உணர்கிற தருணத்தில், ( وان خفتم في شقاق بينهما )ஆண், பெண் இரு தரப்பிலிருந்தும் விடயதான அறிவுமிக்க , தீர்ப்பு சொல்லக்கூடிய இருவரை அனுப்புங்கள் ( فابعثو حكما من اهله وحكما من اهلها )அதன் விளைவாய் அவர்கள்  பிரச்சினையினை முடிவுக்குக் கொண்டு வந்து ஒற்றுமையாய் மீள இணையவேண்டுமென்பதற்காய். ( ان يريد اصلاحا ) . அது நடக்குமாயின் அல்லாஹ் தம்பதியினருக்கு அமுயற்சியினை வெற்றியாக்கிக் கொடுப்பான். ( يوفق الله بينهما ) .


வீட்டின் உள்ளே வெளியே என இரண்டு தளத்தில் பிரச்சினை தீர்க்கப்படும் உபாயங்களை அல்-குரான் சொல்லித்தரும் விதம் அற்புதமானது. குடும்ப உள் முரன் நிலை , சேர்ந்து வாழ்தலில் அசொளகரியம், பிரிவுக்கான மனத்தாயார் நிலை தம்பதியினருக்கு ஏற்படும் போது பிரச்சினையை எப்படி கட்டம் கட்டமாக அனுகலாம் என்பது அதன் தெளிவான வழகாட்டலாகும்.


ضرب - அடித்தல் என்று புரிதல் ஏன் சரியானதோ / பொருத்தமானதோ அல்ல ?


இரண்டு முக்கிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அடித்தல் ( Strick / beat ) , உடலளவில் நோவினை ( Physical abuse )  , கை கொண்டு அல்லது வேறு பொருள் கொண்டு ( Beating with an object ) அடித்தல் என்கிற புரிதலிலுள்ள‌ மாற்று கருத்தினை முன்வைக்கலாம்.


1-  அந்த சொல்லின் அடிப்படையான பரந்த கருத்தினை (Comprehensive meaning  ) கவனத்தில் கொண்ட புரிதல். - ளரப - என்ற சொல்  குரானில் வெவ்வேறு இடக்களில் அந்த வினையின் வெவ்வேறு மாறுபட்ட சொல்மாதிரிகளிலும் ( Verb’sdifferentdimensions of meaning ) அர்த்தப்பிரயோகங்களிலும் அமைந்துள்ளதை புரிதல்.


2-  குடும்பம், மண வாழ்வு என்கிற சமூகத்தின் மிக அடிப்படையான கூறு எந்த அடிப்படை தூண்களில் கட்டமைந்து எழுப்பப்படவேண்டுமென்று இஸ்லாம் வலியுறுத்துகிறது என்ற ஆழமான புரிதல்.


முதலாவதாக , குறுப்பிட்ட " ளறப " என்ற சொல்லின் பிரயோகம் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என நோக்கின், 


அதிகளவில் பயன்பாட்டில் இருக்கும், பிரயலமடந்துள்ள ஆங்கில தமிழ் மொழியாக்கங்களில், 


-  : அவர்களை அடியுங்கள்: (( Beat them )) என்று  Ahmed Ali,Ahmed Raza Khan,Arberry,Asad,Daryabadi,Maududi,Qarai,Sarwar,Shakir   ஆகியோரும்

- : இலேசாக அடியுங்கள்/ பயன் தருமாயின் ((beat them (lightly, if it is useful)) என்று Hilali & amp; Khan,Yusuf Ali, Wahiduddin Khan ஆகியோரும்

- : நோகாமல், காயம் ஏற்படாமல் அடியுங்கள் என்று Qaribullah & Darwish உம் 


- : Strick them என்று Itani அவர்களும்

- : Scourge them -இது ஆழமானஅர்த்தம் கொண்டது. மிக பாதிப்பு தரும் வகையில் அடித்தல் , அல்லது அதற்கு சமனான செய்கையைக் குறிக்கும்.


முக்கியமான கேள்வி,


சமாதனாத்தின் பேரிலான தீர்வு முயற்சி மூன்றாம் கட்டமொண்றை அடையும் போது எப்படி வன்முறை சார் எத்தனிப்பொண்றை செய்ய முடியும். அல்குரான் இதைதான் சொல்லியிருக்குமா?


அடுதுத்து, அதே சொல்லாடல் அல்குரானில் பல இடங்களில் 18 வகையான பல்வேறு வித்தியாசமான பொருள் பயன்பாட்டில் வந்துதள்ளமையினை அவதானிக்கலாம். 

உதாரணம் சொல்லுதல் ,
 பூமியில் பயணம் செய்தல்,
செவிபுலனை இல்லாமல் செய்தல்,
 உதாசீனம் செய்தல்,
புறக்கணித்தல்,
உண்மையையும் பொய்யையும் உரசிப்பார்த்து பிரித்தறிதல்,
கடல் நீரில் இடைவெளி அமைத்து பயணித்தல்,
 இரு சாராரை இடயில் சுவர் அமைத்துப் பிரித்தல்,
தலையை, உடற்பாகமொண்றை வெட்டி வேறாக்கல்,
இழிவு  மேசமான நிலையின சூழச்செய்தல்,
கல்லில்/சிலையில்/ தளத்தில் பலமாய் அடித்து துவாரம், பிளவு உண்டாக்கல்,
சத்தியம்செய்வதற்காய் சிலையில் அல்லது ஒரு பொருளில் அடித்தல், ….


பொதுவான குரானின் பாவனை , தூரமாதல், பயணித்தல், பிரிதல் என்ற அர்த்தங்களில் அதிகம் வந்திருப்பதைக் காணலாம். ஒப்பீட்டு ரீதியில் நோக்கினால் கனவன் துனைவி பிரச்சினைகளில் இனக்கம் ஏற்படுத்த சமாதனாமாக்கி, மீண்டும் இணைத்துவைக்க, அவர் தம் பிணக்கு, மன முரனில் இருந்து விலகி மீண்டு வருவதற்கான  3வது கட்ட முயற்சியாக , தாக்குதல், பொளதீக ரீதியாக அடித்தல், கை கொண்டோ, மிஸ்வாக்கு குச்சியாலோ, பிரம்பினாலோ அடித்தல் , நோக வைத்தல் என்பது எப்படி சாத்தியமாகும், மனமாற்றத்தில் அது எத்தகைய பிரதிவிளைவுகளை ஏற்படுத்தும்?  பிணக்கு வருவதற்கு காரணமாய் கனவன் துணைவியை அடிக்கும்  வன்முறையாளனாக இருந்திருந்தால் இந்த இடத்தில் சிக்கல் வரும் . சமாதன முயற்சியில் அவன் மீண்டும் அடிக்கும் வழிமுறையை எப்படி கையாள்வது. அதை விடவும் பேச்சுவார்த்தை, அன்பைத் தள்ளி வத்தல், கூடல் பகிஸ்கரிப்பு என்பன பயனளிக்காத போது எப்படி அடிக்கும் படி சிபரிசு செய்யலாம்.


எனவே ஆணாதிக்கத்தின் மனோபாவத்திலிருந்து விடுபட்டு நோக்கின் அடித்தல் என்ற அர்த்ததில் இருந்து நாம் மீளலாம்.


இறைதூதர் முஹம்மது ஸல்லல்லஹு அலைஹி ஸல்லிம் அவர்களின் வாழ்வின் நடைமுறை உதாரணமும் நாம் மேற் சொன்ன பொருளைத்தான் உறுதி செய்யும். அவர்கள் மனிவியரை அடித்தாகவோ, அடிக்கச்சொன்னதாகவோ பதிவுகள் இல்லை. மாறாக துணைவியர் வீடுகளை பிரிந்து குறிப்பிட்ட காலமளவில் போகாமல் இருந்திருக்கிரார்கள்.


இரண்டாவதாக, 


குடும்பம். என்ற கூறு சமூகத்தின் மிக முக்கிய அடிப்படை. அதன் தோற்றம் வளர்ச்சி, நிலைத்திருப்பு எல்லாமே பரஸ்பர அன்பு, காதல், விட்டுக்கொடுப்பு ஆகிய அதிஉயர் குணவியல்புகளால் அமைபவை.  உங்கள் துணைவியர்களிடத்தில் நீங்கள் அமைதி அடைவதற்காக,  (لتسكنو الها  ) உங்களுக்கிடையில் அன்பையும் , பாசத்தையும் உண்டாக்கினோம் (وجعل بينكما مودة ورحمة )போண்ற வசங்கள் கவனத்திற்குரியன.


பாசத்தின் அலைகளால் சூழப்பட்டும், அன்பின் மென்மையினால் ஆழப்பட்டும், முந்திக்கொண்டு பரஸ்பரம் பராமரிக்கும் காதலால் இயங்கும் குடும்ப நிறுவனத்தில் வன்முறை அதன் எந்த வடிவிலும் உள் வருதை இஸ்லாம் விரும்பவில்லை.  திருமணம், ஆண் பெண்ணுக்கிடையிலான ஓர் அழகிய வாழ்க்கையின் ஒப்பந்தம். ஆண் நிர்வாகியாகவே ஒப்பந்ததில் இணைகிறான். சர்வாதியாக அல்ல. எந்தக் கட்டத்திலும்  துணைவியை அடிக்கவோ , நோவினை செய்யவோ அவனுக்கு உரிமை கிடையாது. பிடித்தால் தொடர்ந்து வாழலாம், பிடிக்கவே இல்லையென்றால் நல்ல முறயில் பிரிந்து விடலாம். எந்த இடத்திலுமே வன்முறைக்கு இடமில்லை. . 

நான் அடிப்பேன் , எனக்கு உரிமை உண்டு என்று உறுமுதல் வேலைக்காகாது. அடித்தால் அது தண்டனைக்குரிய குற்றம். குடித்து வந்து அடித்தால் அது தண்டனையை அதிகமாக்கும். காதி நீதிமண்றங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.  போதைப் பெருள் பாவனை, மனைவியை அடித்தல் குற்றம் நிரூபிக்கப்படின் தகுந்த தண்டணைக்காக காவல் துறயில் ஒப்படைக்கப்படவேண்டும். 


ஆணாதிக்க மனோபாவம் மிகைத்துள்ள சமூகச்சூழலில் பெண்கள் இந்த இடத்தில் கேள்வி எழுப்ப முடியாது இருக்கலாம். ஆனால் அதற்கு இடமளிக்காமல் இருப்பது மிகப்பெரும் சமுக அநீதியாகும்.  மனித இனத்திற்கே அருட்கொடையான தூரரின் காலப்பகுதியில் பெண்கள் மிகத்துணிச்சலுடன் கேள்விகள் கேட்டர்கள். தம்மைக் குறித்துப் பேசும்  சட்டவசனங்களை மீளவும் கேட்டு தெளிவு பெற்றுக்கொண்டார்கள் என்பதற்கு பல ஆதாரபூர்வமான பதிவுகள் உண்டு.


சூறா நிஸா இன் முதல் வசனத்திற்கு மீண்டும் வருவேம்,


ஒரே ஆன்மாவிலிருந்து ( Single Soul ) உம்மை படைத்த இரட்சகன் பற்றிய எண்ணம் உமக்குள் நிரம்பியிருக்கடும். அவன் அந்த ஆன்மாவிலிருந்து அதன் சோடியைப் ( Mate) படைத்தான். அதிலிருந்து அதிகளவில் ஆண்களையும் பெண்களையும் படைத்து  பரவ விட்டான். (سورة النساء ١ )


மனித இனத்தின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் ஆணும் பெண்ணும் சம அந்தஸ்தைப் பெற்றவர்கள். ஒரே ஆன்மாவிலிருந்து படைப்பகப்பட்டவர்கள். ஆளுக்காள் சோடியாகவே உருவாக்கம் பெற்றவர்கள். மனித மேன்மைத்துவ அந்தஸ்துக்கு ( Human Dignity ) பெண் விதிவிலக்கல்ல. அது மீறப்படுவதும் , எதிர்ப்பால் வன்முறையென்பது யார் செய்தாலும் மதிப்பு மீறலாகவும் ( Vaiolating Basic of Human Right ) குற்றமாகவுமே கருதப்படும். 


முடிவாக


முஸ்லிம் சமூகத்து ஐந்தில் மூண்று திருமணங்கள் நீதிமண்றில் முடிவதாக புள்ளிவிபரங்கள் சொல்லுகின்றன.  நமது இளைஞர் யுவதிகளுக்கான‌ திருமண முன் தயார்படுத்தல் ( Pre- Marriage Training & Consultation ) ஒழுங்குகள் நம்மிடம் இல்லை.  ஆண் பென் குணவியல்பு வித்தியாசம் தெரியாது, குடுபம்பம் என்பது  சமூக, பொருளாதார, ஆன்மீக அடிப்படைகளில் அமையும் மிகப் பெறுமதியான ஒரு ஒப்பந்தம் என்கிற போதிய புரிதல் இல்லை. அது தொடர்பிலான சட்டங்களின் அறிமுகம் இல்லை. தாம்பத்திய உறவுக்கான நோக்கம் என்ன அதற்கான ஆரோகியமான முறைவழிகள் பற்றிய அரைகுறை விபரங்கள், ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆழமான தெளிவின்மை, .. இந்த பின்னணியோடுதான் அதிகளவில் நமது பிள்ளைகள் திருமணம் செய்கிறார்கள்.  அவன்/அவள் திடீரென்று ஒரு கலாச்சார அதிர்ச்சியோடு ( Cultural Shock ) சமூக கட்டில் மாட்டிக்கொள்ளும் போது செய்வதறியாது திகைக்கிறான்/ள்.  வயதாகிவிட்டது, போதியளவு பொருளாதாரம் கையிலுண்டு , வேறு குடும்ப சுமைகள் கிடையாது  இனி கல்யானம்தான் என்கிற பாய்ச்சல் அபாயமானது. இலகுவில் பிரிவுகள் இடம்பெறவும், குழந்தையோடு பெண்கள் மறு மனத்திற்கு காத்திருப்பதும் சாதாரனமாய் நிகழும்.  திருமணப் பொருளியல்,( Martial Economy ) , பாலியல் கல்வி(  Sex Education ), ஆன் பெண் அதிகார / ஆளுமைச் சமநிலையும் உறவும் ( Gender Power Balance & relation ), குடும்பவியல் சட்ட ஒழுங்குகள் ,அதன் உயர் நோக்கங்கள் ( Higher Objectives of the Family Life ) பற்றிய விரிவான பாடத்திட்டங்கள் முஸ்லிம் சமூகத்திடம் இன்னும் கவனத்திற்குள்ளாகாத பகுதிகள்.  குறிப்பாக  பெண்களுக்கு தமது  உரிமைகள், தமது சட்டங்கள் சார்ந்த தெளிவான அறிவு இன்னும் வெகு தொலைவிலேயே உள்ளன.


இது மிக மேலோட்டமான குறிப்புக்களே அன்றி மிக ஆழமான ஆய்வு அல்ல. பிழையான் அனுகல் இருக்கலாம் அறிந்தவர்கள் குறிப்பிட்டுக்காட்டினால் நன்றியுடைவனாய் இருப்பேன்.


இங்கு எதையாவது சரியாகக் கூறியிருப்பின் அது அல்லாஹ்வின் அருளால் உண்டானது  என்றும், தவறுகள் அனைத்தும் என் சொந்த கிறுக்குத்தனம் என்றும் அறிக.


20150523 07:40


————————————————————————————————————————————————————————————————————————        

தூண்டியது:

- Eng. Nihaj’s (From Kattankudy) post on Marital Discord @ Political Critique அரட்டைக்குழுமம்


- Critical Dialogue in Human Dignity & Freedom of  Muslim Women with Azeem Salam


துணை நின்றவை:

- கட்டுரை دردشةحولفقه النساء للدكتور طه خابر العلولني

(http://www.alwani.net/مكتبة_المقالات/فقه_الأسرة/item/621-دردشة_-حول_-فقه_-النساء.html)


- Marital Discord ( Recapturing Human Dignity through the Higher Objectives of Islamic Law) , Dr.Abdul Hamid Abu Sulaiman, IIIT , London-Washington 2008


- தூதுதுவத்தின் காலத்தில் பெண்விடுதலை. ஆஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் அப் ஷக்கா, Fuzin Text , Darga Town, 2015


- இணையம் 

http://quran.ksu.edu.sa

http://www.baheth.info


http://www.tanzil.net

No comments: